கொழும்பில் எரிபொருள் நிலையத்தில் பதற்ற நிலை!

0
66

கொழும்பிலுள்ள எரிபொருள்நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனையிலுள்ள எரிபொருள் நிலையத்தில் இன்று காலை முதல் மண்ணெண்ணெய் விநியோக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் அப்பகுதிக்கு மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்துள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் அங்கு மக்களுக்கிடையில் குழப்பம் ஏற்பட்டு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு பொலிஸார் வந்து நிலைமையை சுமூகமாக்கியுள்ளனர். 

மேலும், கொழும்பில் ஒரு சில எரிபொருள் நிலையங்களிலேயே மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்று வருவதால் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் குறித்த ஒரு சில எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு வருவதாக தெரியவருகிறது.இதனால் பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் மக்கள் கேன்களுடன் நீண்ட வரிசைகளில் நிற்பனை காணக்கூடியதாக உள்ளது.