கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளேன்! ஜனாதிபதி அறிவுப்பு

0
67

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் நெருக்கடி நிலையினை நான் நன்கு அறிவேன். பொதுமக்கள் படும் துயரங்கள் தொடர்பில் நான் அறிவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக தற்போது அவர் ஆற்றிவரும் உரையில் இதனை குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முழு உரை இதோ,

இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன்.

எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன்.

அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன். நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.