ஸ்மார்ட்போன் கீபோர்டுகளை ஈஸியாக இயக்குவது, மாற்றுவது எப்படி?

0
920
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் எதை வேண்டுமானாலும் யூஸர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளலாம். இதுபோன்ற அம்சங்களால் தான் ஸ்மார்ட் போன்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில், ஸ்கீரினில் உள்ள விசைப்பலகை உட்பட கிட்டத்தட்ட அனைத்தையும் யூஸர்கள் தங்களுக்கு பிடித்தது போல் மாற்றிக்கொள்ளலாம்.
பெரும்பாலான ஆண்ட்ராய்டு செல்போன்களில் உள்ள கீ-போர்டுகள் பார்க்கவும், இயக்கவும் சிறப்பாகவே இருக்கும் என்றாலும், அதன் உரிமையாளர் விரும்பினால் கூடுதல் மோட் டூஸ்ல், புதிய லே-அவுட் ஆகியவற்றை பெறலாம். புதிய கீ-போர்டை மேம்படுத்துவதற்கு உங்களுடைய செல்போனில் சில முறை க்ளிக் செய்தால் மட்டுமே போதும்.
உங்களுடை ய ஸ்மார்ட் போனில் புதிதாக கீ-போர்டு ஆப்பை டவுன்லோடு செய்து இருக்கிறீர்கள் என்றால், அது உடனடியாக செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை முயற்சித்து பாருங்கள். உங்கள் ஃபோனின் பிராண்ட் மற்றும் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் கீழே உள்ள வழிமுறைகள் ஓரளவுக்கு மாறலாம். அப்படி ஏற்பட்டால் சரியான மெனுவை கண்டுபிடிக்க சேட்டிங்கில், “கீ-போர்டு” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் புதிய கீ-போர்டு செயலியை அப்டேட் செய்ய, சிஸ்டம் என்ட்ரியை அழுத்தவும், அதில் மொழிகள் மற்றும் உள்ளீடு (Languages & input) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
 அடுத்து தோன்றும் திரையில், விர்ச்சுவல் கீபோர்டு (Virtual keyboard) என்பதை டேப் செய்யவும். உங்களுடைய ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து கி-போர்டுகளின் பட்டியலையும் பார்க்கலாம்.
இங்கே காணலாம். Manage keyboards என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், நீங்கள் இதுவரை டவுன்லோடு செய்துள்ள அனைத்து கீ-போர்டு ஆப்களையும் காணலாம்.
 அந்த லிஸ்டில் இருந்து உங்களுக்கு வேண்டிய கீ-போர்டு மெனுவிற்கு நேராக இருக்கு ஸ்லைடர் ஆப்ஷனை ஆன் செய்யுங்கள். அப்போது ஒரு எச்சரிக்கை பாப் அப் ப்ளாஷ் ஆகும். அதில் உங்களுடைய போனில் இருந்து சில தரவுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
ஆண்ட்ராய்டு கீ-போர்டை மாற்றுவது எப்படி?
ஆண்ட்ராய்டு போனில் உள்ள கீ-போர்டுக்கு மாறுவது, புதிய கீ-போர்டு செயலியை டவுன்லோடு செய்து, ஆக்டிவேட் செய்வதை விட மிகவும் சுலபமானது.
 உங்கள் ஸ்மார்ட் போன் டெக்ஸ்ட் ஸ்கீரினில் ஏதாவது ஒரு இடத்தில் டேப் செய்வதன் மூலம் கீபோர்டு வகையை மாற்ற முடியும். கூகுள் சர்ச் பார், டெக்ஸ் டைப்பிங் ஸ்பேஸ் அல்லது இதுபோன்ற மற்ற ஏதாவது ஆப்ஷனை அழுத்தினால். மொபைல் ஸ்கீரினின் வலது மூலையில் ஒரு சிறிய கீ-போர்டு ஐகான் தோன்றும்.
 அதை அடுத்தடுத்து டேப் செய்து உங்களுக்கு வேண்டிய கீபோர்டு வகையை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதை ஒவ்வொருமுறை நீங்கள் தொடும் போது கீ-போர்டு மாறிக்கொண்டே இருக்கும்.
 ஒருவேளை உங்களது செல்போன் நிறுவனம் அல்லது மாடலைப் பொறுத்து கீ-போர்டு ஐகான் வலது மூலையில் தோன்றாமல் இருக்கலாம். அப்படியானால் நேரடியாக மேலே உள்ள nav bar-யை ட்ராக் செய்து, அதில் Change keyboard ஆப்ஷன் மூலமாக மாற்றிக்கொள்ளலாம்.