மானிப்பாயில் இரு பெண்களுடன் ஒரே நேரத்தில் ஜல்சா பண்ணிய பிரான்ஸ் 57 வயது முதியவர்

0
358

யாழ் மானிப்பாய் பகுதியில் இருபெண்களுடன் தங்கியிருந்த 57 வயதான முதியவர் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.

தனது குடும்பத்துடன் பிரான்சில் நீண்ட காலம் வசித்து வந்த யாழ் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு உறவினர்களைப் பார்வையிட வந்துள்ளார்.

மானிப்பாய் பகுதியில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது பழைய காலத் தோழர்களையும் அங்கு அழைத்து மது விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்.

இவரதும் இவரும் இவரது பழைய காலத் தோழர்களும் இரவிரவாக சாராய போதையில் கூத்தடித்து வந்ததை அப்பகுதி இளைஞர்கள் கடுப்புடன் அவதானித்து வந்துள்ளார்கள்.

அத்துடன் சிவில் உடையில் இவரது தோழரின் நெருங்கிய நட்புக்களான பொலிஸ் தரப்பைச் சேர்ந்த சிலரும் அந்த வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழமைக்கு மாறாக வீட்டுக்கு நடுத்தர வயதான பெண் ஒருவரும் இன்னொரு யுவதியுமாக இருவர் ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளார்கள்.

இதனையடுத்து வீட்டுக்கு அருகில் உள்ள சிறிய மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் இவர் இரவு போடப் போகும் கூத்தை கையும் மெயுமாக பிடிப்பதற்கு ஆயத்தமானார்கள்.

இரவு 10 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த இளைஞர்கள் முதியவரையும் நடுத்தர வயது பெண்ணையும் முழு நிர்வாணமாகவும் யுவதியை அரை குறை ஆடையுடனும் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசாருக்கு முறையிட்ட போதும் பொலிசார் வரவில்லை என்றும் அதன் பின் அவசர பொலிஸ் இலக்கத்துக்கு முறையிட்ட போது நள்ளிரவு தாண்டி அங்கு பொலிசார் வந்துள்ளார்கள்.

பொலிசார் வந்த பின்னர் இவர்களது விளையாட்டை இளைஞர்கள் தெரிவித்த போதும் பொலிசார் அதனை கருத்தில் எடுக்காது இளைஞர்களை அச்சுறுத்தியதாகத் தெரியவருகின்றது.

அத்துடன் அங்கு நின்ற இளைஞர்களின் கைத் தொலைபேசிகளை பறித்து எடுத்து கடுமையாக ஆராய்ததாகவும் இளைஞர்களின் பெயர் விபரங்களைப் பதிவு செய்து அச்சுறுத்தியதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

முதியவர் மற்றும் பெண்கள் தொடர்பான வீடியோக்கள் ஏதாவது வெளியாகினால் அல்லது தொலைபேசியில் வைத்திருந்தால் உடனடியாக கைது செய்து சிறையில் அடைப்போம் என இளைஞர்களை எச்சரித்த பொலிசார் அடுத்த நாள் பொலிஸ் நிலையம் வருமாறு கூறி முதியவரையும் குறித்த இரு பெண்களையும் அங்கு விட்டுச் சென்றுள்ளனர்.

பெண்கள் இருவரும் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.