பிரித்தானியாவில் தொழில்நுட்பக் கோளாறு : Three மொபைல் நிறுவனத்தின் சேவையில் பாதிப்பு காரணமாக ஆயிரக்கணக்கானோர் தவிப்பு

0
230

பிரித்தானியாவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Three மொபைல் நிறுவனத்தின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை ஏற்பட்ட இந்த பிரச்சினையால், ஆயிரக்கணக்கானோர் மொபைல் சேவையைப் பயன்படுத்த இயலாமல் தவித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 10.00 மணியளவில் துவங்கிய இந்த பிரச்சினை தொடர்பாக, பிரித்தானியா முழுவதிலுமிருந்து 3,000க்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக கண்காணிப்பு இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

Three நிறுவனம், இந்த பிரச்சினை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், சேவை விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும் என்றும் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான Three நிறுவன வாடிக்கையாளர்கள் மொபைல் சேவை பாதிப்பு குறித்து ட்விட்டரில் புகார்களைத் தெரிவித்து வருகிறார்கள்.