சூப்பர் ஸ்டாரை குத்திக் காட்டும் அட்லி?

0
93

அட்லியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்தவர்கள் அவர் சூப்பர் ஸ்டாரை தான் குத்திக் காட்டியிருக்கிறார் என்கிறார்கள்.

பாலிவுட் செல்லும் ஆசையில் இருந்த அட்லிக்கு ஷாருக்கானின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து அந்த நட்பை வளர்த்து, அவரை வைத்து படம் இயக்க மும்பைக்கு கிளம்பினார்.

அந்த படத்தை ஷாருக்கானே தயாரிக்கவும் முன் வந்தார். படப்பிடிப்பும் துவங்கியது. நயன்தாரா தான் ஹீரோயின்.

இந்நிலையில் தான் ஷாருக்கானின் மகன் ஆர்யன் போதை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அட்லி படத்தை ஷாருக்கான் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அவர் தற்போது பிற படங்களில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார்.

மும்பையில் இருந்து சென்னை திரும்பிய அட்லி பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறாராம். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அட்லி போட்டிருக்கும் ஒரு போஸ்ட் பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் அதற்காக வருத்தப்படும் நேரம் வரும். கண்டிப்பாக வரும் என்கிற வாசகம் அடங்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அட்லி.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை மனதில் வைத்து தான் அப்படி போஸ்ட் போட்டிருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

கலைந்தது உங்களின் பாலிவுட் கனவு மட்டும் அல்ல தலைவியின் கனவும் தான் என்று நயன்தாரா ரசிகர்கள் ஒரு பக்கம் ஃபீல் பண்ணுகிறார்கள்.