சிரியர்களை போரில் களமிறக்கும் ரஷ்யா: டான்பாஸ் மக்களுக்காக போரிட புதிய அழைப்பு!

0
409

உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்திவரும் ரஷ்யா ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து போராடுவதற்காக சுமார் 40,000 சிரியர்கள் பதிவு செய்து இருப்பதாக அரசு சாரா மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம்(SOHR) தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் கிட்டத்தட்ட மூன்றுவாரங்களாக போரை நடத்திவரும் ரஷ்ய ராணுவம் தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாமல் மிகவும் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில், உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாக களமிறங்கி தாக்குதலில் பங்கேற்பதற்காக கிட்டத்தட்ட 40,000 சிரியர்கள் பதிவு செய்து இருப்பதாகவும், ஆனால் கடந்த திங்கள்கிழமை வரை எந்தவொரு சிரியர்களும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்ற தகவலையும் அரசு சாரா மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம்(SOHR) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிரிய கண்காணிப்பகம் வெளியிட்ட தகவலில், உக்ரைனில் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக ஆள்சேர்ப்பது தொடர்பான அறிக்கைகள் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட அல்-கத்தார்ஜி போராளி உட்பட பலருக்கு அனுப்பட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த போரில் சிரியர்கள் பங்கேற்பதற்கு 1500 முதல் 2500 அமெரிக்கா டாலர்கள் வரை நிர்ணயித்து இருப்பதாகவும், ஆனால் உண்மையான மதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை என்ற வதந்திகள் பரவிவருவதாகவும் (SOHR) தெரிவித்துள்ளது.

இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையானது கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து நடைபெறுவதாக (SOHR) தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி புதின் வெளியிட்ட அந்த அறிவிப்பில், பணத்திற்காக அல்லாமல், டான்பாஸ் மக்களுக்கு உதவுவதற்காக முன்வரும் வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வர்களுக்கு உக்ரைனில் போர் புரிவதற்கான அனைத்து உபகரணங்களையும் வழங்கி உக்ரைனுக்குள் அழைத்து செல்லப்படுவர் என தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, இதற்கு எதிர் கருத்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, வெளிநாட்டு மண்ணில் கொலை செய்ய வரும் சிரிய போராளிகள் “குண்டர்கள் ” கடுமையாக சாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.