வெற்றியை நெருங்கிறது உக்ரைன்! ரஷ்ய வீரர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கும்: ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

0
76

ரஷ்யா முன்னெடுத்த இந்த போரில் உக்ரைனின் வெற்றி விரைவில் உறுதி ஆகிவிடும் அதனால் உயிரை காப்பாற்றி கொண்டு ஓடிவிடுங்கள் அல்லது சரணடையுங்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்ய ராணுவ வீரர்களை எச்சரித்துள்ளார்.

செய்வாய்க்கிழமையான இன்று அதிகாலை உக்ரைனின் நாடாளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோ பதிவில், இந்த வரலாற்று போரின் கடினமான 19வது நாளையும் உக்ரைன் இன்று கடந்து விட்டது, இதன்முலம் உக்ரைன் வெற்றியையும், அமைதியையும் நெருங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

நமது கடுமையான தடுப்புத்திறனால் ரஷ்ய ராணுவ வீரர்கள் மிகவும் குழம்பியுள்ளனர், இதனை ரஷ்ய வீரர்களும் அதிகாரிகளும் உணர்ந்து விட்டதால் அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு போர்களங்களை ஓட்டுகிறார்கள்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால் உக்ரைனுக்கு இலவசமாக ஆயுதங்களை ரஷ்யர்கள் வழங்கி வருகின்றனர், இதனை அவர்கள் கனவிலும் கூட எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

மேலும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இந்த வீடியோ உரை மூலமாக ரஷ்ய வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றையும் அளித்துள்ளார், அதில் “ரஷ்ய வீரர்களே இதை கவனமாக கேளுங்கள்” உக்ரைனில் இருந்து உங்களால் எதுவும் பெறமுடியாது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்து இருப்பீர்கள், இங்கு நிறைய உயிர்களை நீங்கள் பறித்து இருக்கலாம் ஆனால் உங்களின் உயிர்களும் பறிபோகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

எதற்காக நீங்கள் இங்கே உயிர் விடவேண்டும், நீங்கள் உயிர் வாழவேண்டும் என்று நினைப்பதை நான் நன்கு உணர்வேன். அதற்கான வாய்ப்பு ஒன்றை நான் உங்களுக்கு இப்பொது தருகிறேன், நீங்கள் எங்கள் ராணுவத்திடம் சரணடைந்தால், மக்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமோ அப்படியே நாங்கள் உங்களை நடத்துவோம். உங்கள் ராணுவத்தில் நீங்கள் கண்ணியமாக நடத்தப்படவில்லை என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்ததோடு “தேர்ந்தெடு” என தெரிவித்துள்ளார்.

அதேசமயம் உண்மையை தைரியமாக வெளியிடும் ரஷ்யர்களையும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பாராட்டியுள்ளார்.