அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய மக்கள்

0
74

மக்கள் படும் துயரங்களுக்கு பாவிகளாக நீங்கள் மறுப்பிறவியில் பிறப்பீர்கள் என தற்போதைய அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு மேலாடையையும், கீழாடையும் கழற்றிவிட்டு எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லுமாறு கூறுங்கள் என கடும் கோபத்தில் தமது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டில் தற்போது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த அனைவரும் கடும் அதிருப்தியில் இருப்பதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாட்டிலுள்ள நிலவரம் குறித்து பொதுமக்கள் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டனர்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எமது பிள்ளைகள் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். சமய சம்பந்தமான புண்ணிய தானங்களை செய்யக் கூட எங்களிடம் பணமில்லை.

பாவங்களை அதிகரித்துக்கொள்ளலாமல், சஜித் பிரேமதாச அல்லது ஜே.வி.பியின் அனுர ஆகியோரில் ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு தயது செய்து வீடுகளுக்கு செல்லுமாறு கூறுங்கள்.

மக்கள் படும் துயரங்களுக்கு பாவிகளாக நீங்கள் மறுப்பிறவியில் பிறப்பீர்கள். நாங்கள் இவர்களுக்கு வாக்களித்தோம், ஆனால் தற்போது வருத்தப்படுகின்றோம்.

சீனர்களிடமும் இந்தியர்களிடமும் இலங்கையை வழங்காது, சஜித்திடம் அல்லது அனுரவிடம் ஒப்படைக்குமாறு கூறுங்கள். எமக்கு அரசியல் தேவையில்லை. எமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பது எமது தேவை என குறிப்பிட்டுள்ளனர்.