ரத்தத்தை சுத்திகரித்து, கல்லீரலை பலப்படுத்தும் பீட்ரூட்டின் எண்ணிடலங்கா பயன்கள்

0
552

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.

ஆனால், இதில் மாங்கனீசு, கால்சியம், செலினியம், சோடியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

இது குளிர்பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டு வரை இந்த காய்கறி இந்தியாவுக்கு அறிமுகமாகவில்லை. அந்த நூற்றாண்டு தொடக்கத்தில்தான் ஆங்கிலேயர்களால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆங்கிலேயர்களால் உலகின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதால் உலக அளவில் மக்கள் விரும்பும் காய்கறியாக பீட்ரூட் உள்ளது. மக்கள் இதை விரும்புவதற்கு காரணம் இதன் சுவை மட்டுமல்ல, அது கொடுக்கும் பல்வேறு சத்துக்களும்தான்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும்.

ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது.

ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது. பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது.பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

கண்களுக்கு பார்வை

பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கிறது.

சிவப்பணுக்களை அதிகரிக்க

பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கும். இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.

பித்தப்பை சுத்திகரிக்க

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

கல்லீரல் கோளாறுகளுக்கு

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

சரும பாதுகாப்பு

தோலின் நிறம் பளபளக்க பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக்கொண்டால் சருமத்தின் நிறம் மெருகேறும்.

கூந்தல் பராமரிப்பு

தலைமுடியின் நலம் என்பது உடலின் நலத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. சிலருக்கு முடி அடர்த்தி குறைந்து வலுவற்று கிடக்கும். அதற்கு பீட்ரூட் சாற்றை தலையில் தேய்க்க நல்ல மாற்றம் காணலாம். அதுமட்டுமா? பீட்ரூட் சாற்றுடன், வினிகர் கலந்து தேய்க்க பொடுகு, முடி உதிர்தலுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.