புதிய கொரோனா வைரஸ்-அசல் கொரோனா வைரஸ்! இரண்டிற்கும் இடையே இருக்கும் அறிகுறிகள் என்ன? வெளியான பட்டியல்

0
900

தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸிற்கும், பழைய வைரஸிற்கும் ஆன அறிகுறிகள் என்ன என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சில தகவல்கள் தெரியவந்துள்ளன.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி, லட்சக்கணக்கான உயிர்களை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அது தீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்று மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவின் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்தின் (ONS) தரவு படி பார்த்தால், புதிய பிரித்தானியா கொரோனா வைரஸிற்கு பல அறிகுறிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, இருமல், சோர்வு மற்றும் தொண்டை புண் உள்ளிட்டவை பிரித்தானியாவின் புதிய கொரோனா வைரஸ் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம் வயிற்று வலி, சுவை மற்றும் வாசனை இழப்பு ஆகியவை அசல் கொரோனாவிற்கான அறிகுறி என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் திகதிக்குள், கொரோனா நேர்மறை சோதனை பெற்ற நபர்களின் அடிப்படையில், புதிய மற்றும் பழைய கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் வெளியாகியுள்ளன.

ஆனால், அவை இரண்டிற்கும் அதிக அளவு வித்தியாசம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருமல்

அசல் கொரோனா வைரஸிற்கு 28 சதவீத பங்களிப்பு இருந்தால், அதுவே பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸிற்கு 35 சதவீதம் உள்ளது.

தலைவலி

ஓஎன்எஸ் ஆய்வின் படி இரண்டு கொரோனா வைரஸ்களுக்கும் எந்த வித்தியாசம் இல்லை.

சுவை இழப்பு

அசல் கொரோனா வைரஸிற்கு ஏறக்குறைய 18 சதவீதம் இழப்பு என்றால், பிரித்தானியாவின் புதிய கொரோனாவுக்கு ஏறக்குறைய 15 சதவீத இழப்பு.

வாசனை இழப்பு

இதற்கு 19 சதவீதம் வாசனை இழப்பு என்றால், பிரித்தானியா வைரஸிற்கு 16 சதவீதம்.

காய்ச்சல்

பிரித்தானியா கொரோனா வைரஸிற்கு 22 சதவீதமும், முன்பு பரவி வரும் அசல் கொரோனாவுக்கு 19 சதவிதமும் உள்ளது.

மூச்சு திணறல்

ஓஎன்எஸ் ஆய்வில் இரண்டு வகைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தசை வலிகள்

இந்த வைரஸிற்கு 21 சதவீதம் என்றால், பிரித்தானியா வைரஸிற்கு 24 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது.

வயிற்று வலி

ஓஎன்எஸ் ஆய்வில் இரண்டு வகை கொரோனா வைரஸ்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை.

தொண்டை வலி

இதற்கு 19 சதவீதம் என்றால், பிரித்தானியா வைரஸிற்கு 22 சதவீதம் வித்தியாசம்.

வயிற்றுப்போக்கு

ஓஎன்எஸ் ஆய்வில் இரண்டு வகை கொரோனா வைரஸ்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை