ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தினமும் ஒரு பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

0
984

 

ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

நிச்சயம் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும்.

இங்கு பேரிச்சம் பழத்தை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளை பார்க்கலாம்.

 

  • பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிரறந்துள்ளது.
  • பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
  • பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
  • ஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.
  • பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
  • ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.