காசா பகுதிக்கு 360 மில்லியன் டாலர் நிதி மானியம் வழங்க கத்தார் அமீர் உத்தரவு.!

0
459

பாலஸ்தீனில் உள்ள காசா பகுதிக்கு 360 மில்லியன் டாலர் நிதி மானியத்தை ஒதுக்குமாறு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (31-01-2021) உத்தரவிட்டுள்ளார்.இந்த மாதம் முதல் தொடங்கி ஆண்டு முழுவதும் மானியத்தை விநியோகிக்க கத்தார் அமீர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மானியத்தை காசா பகுதியில் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு கத்தார் அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் விதமாக வழங்குகிறது.

இந்த மானியம் ஊழியர்களின் சம்பளத்தை வழங்கவும், தேவை உள்ள குடும்பங்களுக்கு நிதி உதவியை வழங்கவும், மனிதாபிமான நிலைமை மோசமடைவதையும் மற்றும் கடினமான வாழ்க்கை நிலைமைகளை குறைக்கவும் மின் நிலையங்களை இயக்க பயன்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.