அமைதிக்கான நோபல் பரிசு… கிரெட்டா துன்பெர்க், ரஷ்யாவின் நாவல்னி, உலக சுகாதார அமைப்பு பரிந்துரை

0
495

ஓஸ்லோ: 2021ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி, பருவநிலை போராளி கிரெட்டா துன்பெர்க், உலக சுகாதார அமைப்பு ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்ட முயலும் தலைசிறந்த நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் ஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள நோபல் குழு இந்தப் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும். ஏற்கனவே, நோபல் பரிசு பெற்றவர்கள், சர்வதேச நாடுகளின் நாடாளுமன்றங்கள் என பலரும் விருதுக்குச் சரியான நபர்களை பரிந்துரைக்கலாம். அதன்படி நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தங்கள் பரிந்துரைகளை வழங்கி வருகின்றன.
நார்வே நாடாளுமன்ற பரிந்துரை நார்வே நாடாளுமன்றம் பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவருக்கே இதுவரை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காக ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி, பருவநிலை போராளி கிரெட்டா துன்பெர்க், உலக சுகாதார அமைப்பு மற்றும் கோவாக்ஸ் திட்டம் ஆகியவற்றை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

44 வயதாகும் அலெக்ஸி நாவல்னி ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். ரஷ்யாவிலுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர், அதிபர் புடினின் ஊழல்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகி

றார். கடந்தாண்டு செர்பியா சென்று கொண்டிருந்த நாவல்னி மீது மர்ம நபர்கள் ரசாயன தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஜெர்மனியில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா திரும்பினார். அப்போது அவரை ரஷ்யா காவல் துறை கைது செய்தனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த ரஷ்யா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பருவநிலை போராளி கிரெட்டா துன்பெர்க். இவர் தனது 16 வயதிலேயே பருவநிலை மாற்றத்திற்கு எதிராகவும், உலக வெப்ப மயமாதலுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். Friday for future எ

 

ன்று இவரது அமைப்பு, தற்போது உலகெங்கும் பருவநிலை மாற்றத்திற்காகப் போராடும் மிகப் பெரிய மாணவ இருக்கும் அமைப்பாக உருவெடுத்துள்ளது. இவர் ஏற்கனவே 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்.
இதேபோல உலக சுகாதார அமைப்பும் நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பரிந்துரைக்கப்பட்டது. ஏழை நாடுகளுக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்காக கோவாக்ஸ் என்ற திட்டத்தை உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்திருந்து. இந்த கோவாக்ஸ் திட்டமும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.