கொரோனாவால் சுவிஸ் வர்த்தகம் வரலாறு காணாத அளவுக்கு பாதிப்பு: வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள்

0
490

கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட வருடாந்திர வெளிநாட்டு வர்த்தக புள்ளிவிவரங்களின்படி சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்றுமதியும் இறக்குமதியும் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்றுமதி 7.1 சதவிகிதம் குறைந்துள்ளது (225.1 பில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது), இறக்குமதி 11.2 சதவிகிதம் குறைந்துள்ளது (182.1 பில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது).

2009க்குப் பிறகு இதுதான் சுவிஸ் வர்த்தகத்தில் மிகப்பெரும் வீழ்ச்சி

யாகும். கைக்கடிகாரங்களுக்குப் பேர்போன சுவிட்சர்லாந்தில், கைக்கடிகாரங்கள் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2019ஐ ஒப்பிடும்போது சுவிஸ் கைக்கடிகார ஏற்றுமதி, 22 சதவிகிதம் குறைந்துள்ளது, அதாவது 17 பில்லியன் சுவிஸ் ப்ராங்குகள்.

இதற்கு முந்தைய ஆண்டு, 748 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் லாபம் காட்டிய பிரபல கைக்கடிகார தயாரிப்பு நிறுவனமான Swatch நிறுவனம், தற்போது 53 மில்லியன் நஷ்டத்தை சந்தித்து, 5.6 பில்லியனாக, அதாவது மூன்றில் ஒருபங்கு வியாபாரம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.