காய்கறிகளின் விலை இருமடங்காக கூடியது

0
450

காய்கறிகள் விநியோகம் குறைந்திருப்பதன் காரணமாக பல வகையான காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலையம் தெரிவிக்கின்றன.

தம்புள்ள, நுவரெலியா, பெட்டா மற்றும் நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையங்களின் மேலதிகாரிகளின் கூற்றுப்படி, குறைவான காய்கறி விநியோகம் காய்கறிகளின் விலைகளை கணிசமான அளவு அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பல மரக்கறிகளின் விலைகள் 100 வீதம் கூடியிருப்பதாக நுவரெலிய பொருளாதார மையத்தின் மேலதிகாரி ஆர்.எம். பண்டார தெரிவித்துள்ளார்.

“சமீப காலங்களில் விவசாயிகளிடமிருந்து மோசமான விநியோகம் காணப்படுகிறது. இதற்கான காரணம் சரியாக தெரியவில்லை.

தம்புல்லா பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலை (1 கிலோ) பின்வருமாறு,

போஞ்சி – 220 ரூபாய்
கரட் – 230 ரூபாய்
பச்சைக் கொச்சிக்காய் – 180 ரூபாய்
பூசணிக்காய் – 180 ரூபாய்
கத்தரிக்காய் – 280 ரூபாய்
புடலங்காய் – 180 ரூபாய்