லதா ரஜினிகாந்த்தின் புதிய அரசியல் கட்சி

0
310

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டிசம்பர் மாதம் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்தார். கட்சி துவங்குவதற்கு முன்னதாக தான் நடித்துக்கொண்டிருக்கும் படத்தினை நடித்து முடித்துவிட்டு கட்சியை துவங்கலாம் என்று எண்ணியபோது அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி ஆரம்பிக்கவில்லை என்று அறிவித்து விட்டார். அரசியலுக்கு வரமாட்டேன் என்றும், வேதனைக்கு ஆளாக்க வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்து சிறப்பு தரிசனம் செய்தார். இதில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்கப் போகும் புது கட்சி வெற்றி அடைய வேண்டுமென சிறப்பு பூஜை செய்யப்பட்டு சங்கல்பம் செய்துள்ளார்.

இன்னும் ஒரு சில நாட்களில் லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்கப் போகும் கட்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.