தினந்தோறும் காலையில் அருகம்புல் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

0
140

அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை.

இவற்றை சுத்தமான இடத்தில் இருந்து அருகம்புல் சேகரித்து கொள்ள வேண்டும். நன்கு நீரில் அலசி, சுத்தப்படுத்திய பின்னர் உபயோகப்படுத்தவேண்டும்.

சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகலாம்.

இதனால் உடலில் உள்ள பல நோய்களை காணமால் போய்விடுகின்றது. அந்தவகையில் அருகம் புல் சாற்றை தினமும் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

அருகம் புல்லில் எலும்புகளின் உறுதிக்கு தேவையான மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்து இருக்கின்றன. அருகம் புல் ஜூஸ் தினந்தோறும் காலையில் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாக இருக்கும்.
தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, நீரில் கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக் காய்ச்சி, இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக உட்கொண்டு வந்தால், எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறிவிடும்.
அருகம்புல்லை நீரில் இட்டுக் காய்ச்சி, பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும். அனைத்தையும்விட முக்கியமானது அருகம்புல் சாறு மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பான். இதற்கு இணையாக ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
உடலில் இன்சுலின் குறைபாட்டால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்துவது இவர்களின் உடல்நலத்திற்கு நல்லது.
ரத்த மூலம் உள்ளவர்கள், ஒரு கைப்பிடி அருகை அரைத்து, 200 மில்லி காய்ச்சாத ஆட்டுப் பாலில் கலந்து காலைவேளையில் மட்டும் குடித்து வந்தால், மூன்றே வாரங்களில் கட்டுப்படும். இதைத் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மைக் குறைபாடு நீங்கும்.