ரம்யா பாண்டியனுக்கு அடிச்ச ஜாக்பாட்

0
497

டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இருப்பினும், இந்தப் படங்களுக்குப் பிறகு நம்யா பாண்டியனுக்கு போதுமான வாய்ப்பு அமையவில்லை. தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயங்களை கவர்ந்திழுத்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்குகிறார்.

இது குறித்து ரம்யா பாண்டியன் தனது டுவிட்டரில், “எனது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2டி நிறுவனம் தயாரிப்பில் நடிக்கிறேன். இந்த அற்புதமான வாய்ப்பிற்காக சூர்யாவு மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.