இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
580

(Today Horoscope 28. 1.2021)

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

இன்று சார்வாரி வருடம், தை மாதம் 15ம் நாள், ஜமாதிஸானி 14ம் நாள்,
28.1.2021 வியாழக்கிழமை, பௌர்ணமி காலை 1.35 வரை. பூசம் காலை 4.48 மணிவரை தியாஜ் 14.46 அமிர்தயோகம் 55.30 மேல் சித்தயோகம்.

திதி: பௌர்ணமி

தைப்பூசம்.

சந்திராஷ்டமம்: பூராடம்

* நல்ல நேரம் : காலை 10.30 மணி – 11.30 மணி மாலை 11.30 – 12.00 மணி
* ராகு காலம் : மதியம் 1.30 – 3.00 மணி
* எமகண்டம் : காலை  6.00 – 7.30 மணி
* குளிகை : காலை 9.00 – 10.30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்

மேஷம்:

புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள்.

ரிஷபம்:

விருந்தினர்களின் வருகையால் வீடு மகிழ்ச்சியடையும். வியாபாரத்தில் லாபம்  பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

 மிதுனம்:

இனிமையான நாள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதுமுடிவுகள் எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திடீர் பணவரவு உண்டு.

 கடகம்:

வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது கோபம் அடைவீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்:

பொறுமைத் தேவைப்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

கன்னி:

நன்மை நடக்கும் நாள். புது தொழில் தொடங்குவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.

துலாம்:

வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள். முன்ற்றம் காண்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.

விருச்சிகம்:

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைக்கூடும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். உற்சாகமான நாள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

தனுசு:

பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். குழந்தைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். இன்று சந்திராஷ்டமம்.

மகரம்:

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும்.

கும்பம்:

அமோகமான நாள். உத்தியோகத்தில் சிலபுதுமைகளைச் செய்து அசத்துவீர்கள்.  குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.

மீனம்:

நினைத்தது நிறைவேறும் நாள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.

மேலும் பல சோதிட தகவல்கள்

எமது ஏனைய தளங்கள்