வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இதை போக்க இதோ சில டிப்ஸ்

0
565

பொதுவாக சிலருக்கு என்ன தான் முகத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தாலும், வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.

இதற்கு சருமத்தில் மெலனின் என்னும் நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால் தான் இது நிகழ்கிறது.

அந்தவகையில் வாயைச் சுற்றி இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகளை தற்போது இங்கு பார்ப்போம்.

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் அல்லது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
சிறிது ஓட்ஸ் பொடியுடன், ஆலிவ் ஆயில் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நுரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
உங்கள் வாயைச் சுற்றி கருமையாக இருந்தால், நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் வாய் பகுதியைச் சுற்றி தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து, முகத்தில் மற்றும் வாயைச் சுற்றி 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் நீரால் கழுவ வேண்டும்.
ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, அதில் ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, வாயைச் சுற்றி தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.