பொருட்களின் விலை உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

0
374

பொருட்களின் விலை உயர்ந்து மக்களால் வாழ முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது. ஆனால், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பல வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் , அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

சீனி இறக்குமதி மோசடி தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ” வர்த்தமானியின் பிரகாரம் பொருட்களை பெற்றுக்கொடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். 60ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கூறினர். ஆனால், அனைத்து தகுதிகளை பெற்றிருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நிமயனங்களை பெற முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ” என்றும் கூறியுள்ளார்.t