இலங்கையில் பப்பாசிச் செய்கை அழிவினால் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் விசனம்

0
487

கொரோனா,கனமழை, உல்லாசப் பயணிகளின் வருகையின்மை முதலான காரணங்களினால் திருகோணமலை மாவட்டத்தில் செய்கைப் பண்ணப்பட்ட மேட்டு நிலப் பயிர்கள் அழிவடைந்து பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோபாலபுரம், கும்புறுப்பிட்டி , நிலாவெளி, குச்சவெளி முதலான பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட மேட்டு நிலப் பயிர்களே இவ்வாறு அழிவடைந்துள்ளன.

இதனால் தமது மனைவி, பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து இப்பயிர்ச் செய்கை மேற்கொண்டதாகத் தெரிவிக்கின்றனர்.

முதலீடு செய்யப்பட்ட பெறுமதியைக் கூட இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதேவேளை, கொரோனா, கன மழை, உல்லாசப் பயணிகளின் வருகையின்மை, உரிய விலைக்கு விற்க முடியாமை, வியாபாரிகள் வருகையின்மை முதலான காரணங்களினால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இதனால் அழிவடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.