மின் ஒளியில் ஜொலிக்கிறது ஜெயலலிதாவின் நினைவிடம்

0
199

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.79 கோடி மதிப்பில், ஃபீனிக்ஸ் பறவை அமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டது. அந்த நினைவிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று காலை நினைவிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

திறக்கப்படவுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மின் விளக்குகளால் அலரிங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

4 ஆண்டுகள் முடிந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்காமல் நினைவிடத்தை திறக்கின்றனர் என்றும் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.