கின்னஸ் சாதனைப் படைத்த உடும்பு

0
1057

உலகில் உயிர் வாழும் அதிக வயதான உடும்பு என்ற பெயரை, ஆஸ்திரேலிய மிருகக்காட்சி சாலையில் வாழும் உடும்பு பெற்றுள்ளது. சராசரியாக 17 ஆண்டுகள் மட்டும் ஆயுளை உடும்பு பெற்றிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில், குயின்ஸ்லாந்து மிருகக்காட்சி சாலையில் வளரும் உடும்பு, சமீபத்தில் தனது 41வது வயதை பூர்த்தி செய்தது.

இந்த உடும்பு (இகுவானா) 1980 பிப்ரவரி 23ஆம் தேதி சிட்னியில் உள்ள டாரன்கா உயிரியல் பூங்காவில் பிறந்தது. தனது 13 வயது வரை அங்கு வளர்ந்தது. 1993 ஆம் ஆண்டு, குயின்ஸ்லாந்து மிருகக்காட்சி சாலைக்கு மாற்றுப்பட்டு, தற்போது வரை அங்கு வாழ்ந்து வருகிறது.

இதற்கு முன்னர் 23 வயது வரை வாழ்ந்த ஒரு உடும்பு, அதிக நாள் உயிர்வாழும் உடும்பு என்ற சாதனையை படைத்திருந்த நிலையில், அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொடுக்கப்பட்ட கின்னஸ் சாதனை சான்றிதழுடன், உடும்புவின் புகைப்படத்தையும், குயின்ஸ்லாந்து மிருகக்காட்சி சாலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த புகைப்படத்தை, டிவி பிரபலமும், மிருகக்காட்சி சாலையில் பணிபுரியும் பின்டி இர்வினும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் உடும்பு தனக்கு பிரியமான உணவான செம்பருத்தி பூக்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.