கத்தாரில் நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் குறித்து WOQOD விளக்கம்.!

0
484

கத்தாரில் நெடுஞ்சாலைகளில் உள்ள WOQOD பெட்ரோல் நிலையங்களை அடைவதில் சிரமம் குறித்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இது குறித்து WOQOD பெட்ரோல் நிலையம் கூறுகையில், தங்கள் பெட்ரோல் நிலையங்களின் நுழைவு (entrance) அல்லது வெளியேறும் (exit) இடங்களை வடிவமைப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களின் இணையதளம் மூலம் மிக உயர்தரமான சிறந்த சேவைகளை பயன்படுத்தவும் என WOQOD விரும்புகிறது என்று நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நியூ அல் ரெய்வான் பெட்ரோல் நிலையம் சீரமைப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் திறக்கப்பட உள்ளது என WOQOD நிறுவனம் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளது.இந்த பெட்ரோல் நிலையத்தில் Sidra store, Shafaf சிலிண்டர்களின் விற்பனை மற்றும் எரிபொருள் செயல்பாடு உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.