துபாயில் உருவாகிறது இந்து கோவில்

0
1033

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வசித்து வருகின்றார்கள். துபாயின் ஜேபிள் அலி பகுதியில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதால் சீக்கியர்களுக்காக குருநானக் கோயில் கட்டப்பட்டது.

தற்போது அங்கு ஓர் இந்து கோயில் கட்டப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இது இந்துக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு வரும் அக்டோபர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின்போது அரேபிய பாணியில் கட்டப்பட்ட இந்த இந்து கோயில் திறக்கப்பட உள்ளது.

1950-ல் பனியா சமூக மக்களுக்காக சிந்தி குரு தர்பார் கோயில் இப்பகுதியில் கட்டப்பட்டது. இந்த கோயிலுக்காக 25 ஆயிரம் சதுரஅடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.148 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த பிரம்மாண்ட கோயில் ராஜு ஷெராப் என்ற இந்திய தொழிலதிபர் அளிக்கும் நிதியில் உருவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் இந்த கோயில் நிர்வாக டிரஸ்ட் உறுப்பினராகவும் உள்ளார். கடந்தாண்டு பிப்ரவரி மாதமே இந்த கோவிலின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்று விட்டது. இந்த கோயிலில் 11 இந்து தெய்வங்களின் சிலைகள் உருவாக்கப்பட உள்ளன.