கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் மெக்சிகோ ஜனாதிபதி அண்ட்ரஸ் லோபஸ்

0
509

மெக்சிகோவின் ஜனாதிபதி அண்ட்ரஸ் லோபஸ்ஸுக்கு (Andres Lopez) நேற்றைய தினம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில், தான் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்  மெக்சிகோவுக்கு ஸ்பூட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பெறுவது தொடர்பாக  ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன்  தொலைபேசி வழியாக பேசவுள்ளதாகவும் மெக்சிகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.