தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் – ஏமாறறம் அடைந்த இந்திய ஜோடிகள்

0
519

டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையரில் நேற்று நடந்த அரைஇறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 18-21 என்ற நேர் செட்டில் ஆரோன் சியா- சோ வூய் யிக் (மலேசியா) இணையிடம் தோற்று நடையை கட்டியது.

இதே போல் கலப்பு இரட்டையரிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் அரைஇறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-18, 12-21 என்ற செட் கணக்கில் போராடி தாய்லாந்தின் டேச்சாபோல்-சப்சிரீ இணையிடம் வீழ்ந்தது.

பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-19, 21-15 என்ற நேர் செட்டில் அன் சி யங்கை (தென்கொரியா) விரட்டியடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.