ஆத்மியாவுக்கு திருமணம்

0
515

மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மியா. தற்போது சமுத்திர கனியுடன் வெள்ளை யானை படத்தில் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. திருமணம் ஜனவரி 25ஆம் தேதி கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இது பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணம். ஜனவரி 26ஆம் தேதி ஓட்டலில் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பதற்கு சனூப் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.