தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கால்இறுதிக்கு சிந்து தகுதி

0
470

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-10, 21-12 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

சிந்து அடுத்து முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்திக்கிறார்.