சிறுவனின் படிப்பிற்கு உதவிய தல அஜித்

0
413

ஒரு சில நடிகர்கள் உதவி செய்தால் அதனை சமூகவலைதளப் பக்கத்தில் போட்டோவுடன் போட்டு பெருமையாக கூறிக் கொள்வதுண்டு. ஆனால் தல அஜித் இதற்கு நேர் மாறானவர். இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் உதவி செய்துள்ளார். இதுவரை எந்த ஒரு இடத்திலும் உதவி செய்ததை அவர் வெளிக்காட்டியதில்லை.

ஹைதராபாத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருந்த தல அஜித் கிடைத்த இடைவெளியில் பைக்கிலேயே வாரணாசி வரை சென்றுள்ளார். அப்போது ரோட்டு கடையில் அஜித் சாப்பிட்டுள்ளார். அந்த கடையில் சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருக்கிறான்.

அந்த சிறுவன் அஜித்தை பார்த்தவுடன் ஆட்டோகிராப் கேட்டுள்ளான். அப்போது அஜித் ஏன் நீ வேலை செய்கிறாய், படிக்கவில்லையா என கேட்டபோது, கொரோனாவினால் எங்கள் குடும்பம் மிகப்பெரிய வறுமையை சந்தித்துள்ளது. அதனால் பள்ளிக்கூடத்தில் பீஸ் கட்ட முடியவில்லை என கூறியுள்ளான். உடன் அந்த சிறுவனின் படிப்பிற்கு உதவிட தனது மேனேஜர் மூலம் ஒரு லட்சம் வரை உதவி செய்துள்ளார்.

உதவி செய்வது பெரிது அல்ல; அதை யாருக்கும் தெரியாமல், எந்த விளம்பரமும் தேடிக் கொள்ளாமல் செய்வதே பெரிய விஷயம். இந்த விஷயத்தில் அஜித் மிக அற்புதமான மனிதர்.