ஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்! மைத்திரி அதிர்ச்சி தகவல்!

0
494

பாராளுமன்றத்தைக் கலைக்க முக்கிய காரணம் என்னவென்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். President Maithripala Speech Sri Lanka Tamil News

நேற்று ஜனாதிபதி தனது நீண்ட உரையில் குறிப்பிட விடயம்,

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது. இதுவே அவசரமாக பாராளுமன்றை கலைக்க முதல் காரணம்.

பாராளுமன்றத்தைக் கலைக்க நேர்ந்த இரண்டாவது காரணி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் அதிசயமான செயற்பாடாகும். அவரின் செயற்பாட்டையிட்டு நான் மிகவும் வருந்துகின்றேன்.

இரு தரப்பையும் சார்ந்த உறுப்பினர்களும் அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஊடகங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் பட்சத்தில் ஒரு பாரிய மோதல் ஏற்படும் எனவும் சில சமயம் சிலர் மரணிக்க நேரிடும் எனவும் சிலர் தெரிவித்தார்கள்.

இதன் காரணமாவே பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு வர நேரிட்டது என ஜனாதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites