Type to search

இந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்

WORLD

இந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை 6.20 மணியளவில் பங்கல் பினாங்கு தீவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. Indonesia magic plane 188 people crashed sea shocked

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேடும் பணியை தொடங்கினர். விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், லயன் ஏர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடி வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் இருக்கைகள் உள்ளிட்ட பாகங்கள் ஜாவா கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

tags ;- Indonesia magic plane 188 people crashed sea shocked

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like