ரணிலின் பதவி நீக்கத்துக்கு காரணத்தை வெளியிட்டார் ஜனாதிபதி!

0
227
President Maithri Speech Today Sri Lanka Tamil News

ஜனாதிபதி மைத்திரி சற்று நேரத்துக்கு முன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு. President Maithri Speech Today Sri Lanka Tamil News

“2014ஆம் ஆண்டு என்னை பொது வேட்பாளராக தெரிவு செய்த போது நான் எதிர்நோக்கி ஆபத்தான நிலைமை எனக்கு மட்டுமல்ல எனக்கு மட்டுமல்ல எனது மனைவி, பிள்ளை என அனைவருக்கும் இருந்தது.

அவற்றை எல்லாம் தண்டி பெற்ற வெற்றியை கொச்சைப்படுத்திடும் வகையில் ரணில் நடந்து கொண்டார்.

இலங்கையின் எதிர்காலத்தை அவர் அவருடன் நெருக்கமாக செயற்படும், மக்களின் உண்மையான இதய துடிப்பை அறியாத மேல் தட்டு வகுப்பினர் வினோத களியாட்டு இடமாக மாற்றும் நிலைமைக்கு அவர் சென்றார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நான் தேர்தலில் வெற்றி பெற்று மறு நாள் மாலை நான் பதவியேற்கும் போது நாடாளுமன்றத்தில் 47 உறுப்பினர்களை கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தேன்.

எனினும் அந்த உன்னதமான நல்லாட்சி எண்ணக்கருவையும் நல்லாட்சியின் நோக்கத்தையும் ரணில் விக்ரமசிங்க அழித்தார். நாட்டில் ஊழல், மோசடிகள் பெருமளவில் அதிகரித்தன.

எனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரசியல் ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டன. கொள்கை ரீதியான மோதல்களை நான் பார்த்தேன் , இதன் காரணமாக நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து அவரை பதவி நீக்கினேன்.” என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites