11 ஆவது பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்ல மறுத்த கர்ப்பிணித் தாய்

0
735

தமிழ்நாடு முசிறியில் 11 ஆவது பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்வதற்கு கர்ப்பிணித் தாயொருவர் மறுப்புத் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. (pregnant woman refused come hospital 11th India Tamil News)

45 வயதுடைய சாந்தி என்ற தாய் 10 பிரசவங்களில் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில் மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. குறிப்பாக அனைத்து குழந்தைகளுமே அவரது வீட்டிலேயே சுகப் பிரசவத்தில் பிறந்துள்ளன.

பிரசவம் அனைத்தையும் சாந்தியின் கணவர் கண்ணனே உடனிருந்து பார்த்துள்ளார். இதில் இரண்டு பிள்ளைகள் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மூத்த மகள் சீதாவிற்கு திருமணமான நிலையில், உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். சீதாவிற்கு ஒரு மகள் உள்ளார்.

தற்போது 8 குழந்தைகளுடன் வசித்து வரும் சாந்தி, கண்ணன் தம்பதிக்கு மேலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையின் விளைவால், தற்போது சாந்தி நிறைமாத கர்ப்பிணியாகவுள்ளார்.

இந்த நிலையில் சுகாதார செவிலியர்கள் சிகிச்சைக்காக அரச வைத்தியசாலைக்கு அழைத்தும் சாந்தி வர மறுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாய், சேய் நல அலுவலர் உஷாராணி, தண்டலைப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கார்த்திக், குழந்தைகள் நல அலுவலர்கள் கர்ப்பிணி பெண் சாந்தியின் வீட்டிற்கு சென்றனர்.

மருத்துவ அலுவலர்கள் வீட்டிற்கு வருவதை அறிந்த சாந்தி முசிறி காவிரி ஆற்றங்கரைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து, மருத்துவ அலுவலர்கள் முசிறி அனைத்து மகளிர் பொலிஸாரின் உதவியுடன் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று அங்கிருந்த சாந்தியிடம் அறிவுரை கூறி, முசிறி அரச வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

ரத்தசோகைக்காக சாந்திக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், அரசு ஒரு குழந்தை போதும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் 11 குழந்தைகளை பெற்ற சாந்தியையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்ற மருத்துவ அலுவலர்கள் பொலிஸார் உதவியுடன் பெரிய போராட்டமே நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மகப்பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தியின், மூன்று மகள்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் சாந்தி தற்போது பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; pregnant woman refused come hospital 11th India Tamil News