டெல்லியில் 8 வயது மதரசா மாணவன் பலி; அப்பகுதியில் பெரும் பரபரப்பு

0
343
8 year old madrasa student dies

டெல்லியில் சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 8 வயது மதரசா மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (8 year old madrasa student dies scuffle between two India Tamil News)

டெல்லி மால்வியா நகரில் மதரசா முன்புள்ள பகுதியில் வெற்றிடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதன்போது, மதரசா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேறு வெற்றிடம் அருகில் இல்லாததால் அங்கு விளையாடுவதாக கூறியதை மதரசா மாணவர்கள் ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மதரசா மாணவன் ஒருவனை கீழே பிடித்து முரட்டுத்தனமாக தள்ளியதனால் தலையில் அடிபட்டு மயங்கி விழுந்த அந்த மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட 4 சிறுவர்களை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் அதேவேளை, உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என பொலிஸ்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; 8 year old madrasa student dies scuffle between two India Tamil News