இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை வாங்க இந்தியா திட்டம்

0
496
Israel signs USD 777 mn missile defence deal India Tamil News

இஸ்ரேல் நாட்டில் இருந்து கடற்படைக்கு பயன்படுத்தும் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை கூடுதலாக வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. (Israel signs USD 777 mn missile defence deal India Tamil News)

ஏவுகணைகள், விமானங்கள், ஹெலிகொப்டர்கள் போன்ற வான்வழி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா இஸ்ரேல் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கியுள்ளன.

பராக் 8 எனப்படும் இத்தகைய ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் இருநாட்டு படைகளிலும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இந்த பராக் 8 குழுமத்தில் இருந்து கடற்படைக்கு பயன்படுத்தும் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை கூடுதலாக வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதன்படி 7 கப்பல்களில் பொருத்துவதற்காக 777 மில்லியன் டொலர் செலவில் ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் வாங்குவதற்கு இஸ்ரேல் நாட்டு நிறுவனத்துடன், மத்திய அரசின் பெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

தரை, வான் மற்றும் கடல்மார்க்கமாகவரும் அனைத்து அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள கப்பலுக்கு ஆற்றல் அளிக்கும் இந்த அமைப்பில், டிஜிட்டல் ராடார், லோஞ்சர்கள், இடைமறிப்பு, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் என நவீன கருவிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒப்பந்தத்திற்காக பெல் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ள இஸ்ரேல் நிறுவனம், இந்த ஒப்பந்தத்துடன் கடந்த சில ஆண்டுகளில் பராக் 8 தளபாடங்களுக்காக மொத்தம் 6 பில்லியன் டொலர் அளவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Israel signs USD 777 mn missile defence deal India Tamil News