உத்தரகாண்ட் பிரதேசத்தில் 827 ஆபாச இணையத் தளங்களுக்கு தடை

0
604
Block 827 porn websites India Tamil News

ஆபாச தளங்களை முடக்குமாறு உத்தரகாண்ட் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து 827 ஆபாச இணையத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. (Block 827 porn websites India Tamil News)

இணைய தளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் அதிகளவிலான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயற்பட்டு வருகின்றன.

இந்த இணைய தளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லை. குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மாத்திரம் இடம்பெற்றால் அவை தடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில், ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

இதனை விசாரணை செய்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி கடந்த மாதம் 27 ஆம் திகதி உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, மத்திய எலெக்ட்ரோனிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

நீதிமன்றம் உத்தரவிட்ட 857 ஆபாச தளங்களை ஆய்வு செய்ததில் 30 தளங்களில் ஆபாச படங்கள் காணப்படவில்லை. மீதி 827 தளங்களில் ஆபாச படங்கள் காணப்பட்டன.

எனவே, அந்த தளங்களை முடக்கும்படி மத்திய எலெக்ட்ரோனிக் தகவல் தொழில்நுட்பத்துறை தொலைத்தொடர்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த துறை இணையதள வசதிகள் வழங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிவனங்களுக்கும் ஆபாச தளங்களை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளதன்படி படிப்படியாக ஆபாச இணைய தளங்கள் முடக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Block 827 porn websites India Tamil News