கொலன்னாவை எரிபொருள் குழாய் பகுதி மக்களுக்கு புதிய வீடுகள்!

0
529

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை வரையான எரிபொருள் குழாயை அண்மித்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். Arjuna Ranatunga Last Statement Sri Lanka Tamil News

இது தொடர்பில் அவர் கூறியதாவது,

இந்த எரிபொருள் குழாய் 70 ஆண்டுகள் பழமையானமையால் இது எப்போது உடைந்து போகும் என்று எங்களால் கூறமுடியாது.

இதன் காரணமாக இப் பிரதேச வாசிகளை குறித்த பகுதியிலிருந்து வெளியேற்ற நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அரசாங்கம் செயல்படுவதனால் அப் பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் புதிய வீடுகளை வழங்க நாம் முன்வந்துள்ளோம் என கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக அப் பிரதேசத்தை சேர்ந்த முதல் 20 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் நேற்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வேளை அமைச்சர் இந்த கருத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

Tamil News Group websites