5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..!

0
538
kimi raikkonen wins us grand prix lewis hamilton unable seal

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் 18-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி பந்தயம் ஆஸ்டின் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 308.405 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் அதிவேகமாக சீறிப்பாய்ந்தனர். kimi raikkonen wins us grand prix lewis hamilton unable seal,tamil news,sports news in tamil,latest news

2-வது வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனென் (பெராரி அணி) 1 மணி 34 நிமிடம் 18.634 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை கைப்பற்றினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு கிமி ராய்கோனென் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கடைசியாக கிமி ராய்க்கோனென் 2013-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி போட்டியில் வென்று இருந்தார்.

அவரை விட 1.281 வினாடிகள் பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகள் பெற்றார். முதல் வரிசையில் இருந்து காரை செலுத்திய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2.342 வினாடிகள் பின்தங்கி 3-வது இடம் பிடித்து 15 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்து இருந்தால் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

kimi raikkonen wins us grand prix lewis hamilton unable seal

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news