Type to search

மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்!

WORLD

மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது அவரின் வயிற்றிலிருந்து 122 ஆணிகளை மீட்டெடுத்துள்ள சம்பவமொன்று எத்தியோப்பியாவில் இடம்பெற்றுள்ளது. 122 nails removed stomach patient

இதுகுறித்து செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தாவித் தியாரே கூறியதாவது,

மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். மனநலம் பாதிப்பு தொடர்பான மருந்துகளை அவர் கடந்த 2 ஆண்டுகளாக உட்கொள்ளவில்லை. இந்த காலத்தில் அவர் ஆணிகளையும், உடைந்த கண்ணாடி துண்டுகளையும் விழுங்கியுள்ளார்.

அந்த நபர் எதையேனும் விழுங்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ததில் 122 ஆணிகளை எடுத்துள்ளோம். அவை ஒவ்வொன்றும் 10cm நீளம் கொண்டதாக இருந்தன.

அதிர்ஷ்டவசமாக ஆணிகள் எவையும் அவரது வயிற்றை கிழிக்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்; உயிர்கூட பிரிந்திருக்கலாம். அவர் இப்போது குணமடைந்து வருகிறார். என அவர் தெரிவித்துள்ளார்.

tags :- 122 nails removed stomach patient

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like