மகிந்த – மைத்திரி சந்தித்தால் பாதகம் இல்லை! அமைச்சர் மஹிந்த அமரவீர!

0
489

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சந்தித்துக் கதைத்துக் கொள்வது பாரியதொரு பிரச்சினையல்ல. நாட்டின் தேசியப் பிரச்சினைகளை அரசியல் தலைவர்கள் சந்தித்துப் பேசிக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Minister Mahinda Amaraweera Statement Sri Lanka Tamil News

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சந்தித்து கொண்டதாக கிளம்பியுள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து கூறும் போதே அமைச்சர் இந்த கருத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

நாட்டின் அரசியல் ஸ்தீரத்தன்மையைப் பாதிக்கும் வகையிலும், மக்கள் ஆணைக்கு எதிராகவும் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க மாட்டார்.

கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொண்டு கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

நல்லாட்சியில் குறைபாடுகளும் உள்ளன. அவற்றைச் சரிசெய்து கொண்டு 2020 வரை இந்த அரசாங்கம் பயணிக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!

யாழில் பொலிஸ் அதிரடி வேட்டை – 41 பேர் கைது!

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிப்பிரமாணம்!

ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

Tamil News Live

Tamil News Group websites