ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ் நாடு மூன்றாவது இடம்

0
541
tamil nadu 3rd most corrupt state survey

இந்தியாவிலேயே ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ள அதேவேளை, தமிழ் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (tamil nadu 3rd most corrupt state survey)

‘தி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பின் இந்தியக் கிளை நாடு முழுவதும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஊழல் தொடர்பான ஆய்வை நடத்தியதில் இந்திய அளவில் அதிகம் இலஞ்ச, ஊழல் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

15 மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் அவர்கள் எதிர்கொண்ட ஊழல் அனுபவங்கள் குறித்து ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்த பதில்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்துள்ளன. ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தில், ஆய்வில் பங்கேற்ற 59 சதவிகிதம் பேர் தங்களின் பணி முடிய வேண்டும் என்பதற்காக இலஞ்சம் கொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், தமிழகத்தில் இருந்து இதில் பங்கேற்றவர்களில் 52 வீதமானோர் அரசு சேவையைப் பெற இலஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாகக் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த துறையாக திகழ்வது பத்திரப்பதிவுத்துறை என்றும் 44 வீதம் ஊழல் இத்துறையில் தான் நடப்பதாக தெரியவந்துள்ளது.

அடுத்தபடியாக 17 வீதம் ஊழல் பொலிஸ் துறையிலும் 15 வீதம் ஊழல் உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறுகின்றன. மின்துறை, போக்குவரத்துத் துறை, வரி செலுத்தும் துறை ஆகியவற்றில் 25 வீதம் ஊழல் நடப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்திருக்கின்றது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; tamil nadu 3rd most corrupt state survey