கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..!

0
463
Farmers Association urges procure paddy rice procurement centers immediately

திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக்கிடக்கிறது. இது உடனே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.Farmers Association urges procure paddy rice procurement centers immediately

இதற்கான உரிய நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளரும் போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது பற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.எஸ். கலியபெருமாள் மன்னார்குடியில் திங்கட்கிழமை தெரிவித்ததாவது :

நீடாமங்கலம் வலங்கைமான் குடவாசல் உள்ளிட்ட வருவாய் வட்ட கிராமங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக்கிடக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் கவலைதரும் தொழிலாக மாறியிருக்கிறது.

பல்வேறு பிரச்சனைகளுக்கு மன உளைச்சல்களுக்கு மத்தியில் கடன்பட்டு நெல் சாகுபடி செய்து கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து விற்க வந்தால் ஈரப்பதம் 15 சதத்திற்கு மேல் இருக்கிறது என்று சொல்லி திருவாரூர் மாவட்ட கிராமங்களின் இன்றைய எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் வாங்க மறுத்து விடுகிறார்கள்.

நெல்லை விற்கவும் முடியாமல் திரும்ப எடுத்தும் செல்லவும் முடியாமல் தடுமாற்றத்தில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.

ஈரப்பத வீதம் 22 வரை உள்ள நெல்லை உடனே கொள்ள முதல் செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நுகர்பொருள் வாணிக கழகம் உத்திரவிட வேண்டும்.

விவசாயிகள் அலைகழிக்கபட்டு மனஉளைச்சலுக்கு ஆளாவதிலிருந்து தவிர்க்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகமும் மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியமாக 300 மூட்டைகளுக்கு மேல் எடுக்கக்கூடாது என்ற வாய்மொழி உத்திரவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் அநேகமாக எல்லா கிராமங்களிலும் மழை கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு பொழி்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாய்மொழி உத்திரவை திரும்பப்பெறுவதுடன் விரைவாக ஈரப்பதம் 22 சதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் இதற்கு நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் திருவாரூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து காலநிலையை உணர்ந்து விரைவாக கொள்முதல் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனே இதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மக்களை திரட்டி நீடாமங்கலம் குடவாசல் வலங்கைமான் வட்டங்களில் சாலைமறியல் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :