சிபிஐ விசாரணை துவங்கட்டும்..!

0
483
CBI probe begins india tamil news

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கொடுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.CBI probe begins india tamil news

அதையடுத்து தமிழக முதல்வர் பதவி விலக வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் முதலமைச்சர் பதவி விலகவேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று தமிழக அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணி இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் யாரையும் தவறாக நினைக்கவில்லை என்று கூறியுள்ளது என்றும் அதனால் முதல்வர் பதவி விலக வேண்டுமென்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ முதல்வர் மீதான புகாருக்கு அவர் பதவி விலக வேண்டுமெனில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முதல்வர்கள் பதவியில் இருக்க மாட்டார்கள் என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

அத்துடன் பொய்யான குற்றச்சாட்டுக்காக முதல்வர் பதவி விலக வேண்டுமென்ற அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இவர்கள் தவிர பாஜகவின் மாநிலத் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு அவர்கள் மேல்முறையீடு செய்வதாக பதிலளித்துள்ளனர்.

அதனால் குற்றச்சாட்டுக்காக முதல்வர் பதவி விலக வேண்டுமென்று கூறுவது தவறு என்று கூறியுள்ளார்.

அதேபோல நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதே தவிர குற்றச்சாட்டுக்கு தண்டனை விதிக்கவில்லை.

எனவே தமிழக முதல்வர் பதவி விலகத் தேவையில்லை என்று சிலரும் எடப்பாடிக்காக களமிறங்குகிறார்கள். பொய்யான குற்றச்சாட்டு, முதல்வர் மீது புகார் என்ற நிலையைத் தாண்டி சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதில் இருந்தே அந்த புகாருக்கு ஆதாரம் உள்ளது என்பதை ஏன் இவர்கள் மறந்துவிட்டார்கள்? இந்த வழக்கு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டெண்டர் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெறவில்லை என்று முழுமையாக விசாரிக்காமலேயே ‘தீர்ப்பு’ வழங்கி உயர்நீதிமன்றத்தில் கூறியது.

இந்த நிலையிலே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் முதல்வர் பதவியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணையை சந்திப்பதே முறையாக இருக்கும். பதவியில் உள்ள ஒரு முதலமைச்சர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியும், அவரது சகப்பாடி அமைச்சர்களும் இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் பாஜகவும் வக்காலத்து வாங்குவதிலிருந்தே உண்மையை மூடி மறைக்க திட்டமிடுவது தெளிவாகிறது. எனவே நியாயமான சிபிஐ விசாரணை ஒன்றே இதற்கு தீர்வாகும்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :