உலக வங்கியின் மனித மூலதன குறியீடு பட்டியலில் இந்தியாவிற்கு 115 வது இடம்..!

0
443
World Bank's Human Capital Index India's 115th india tamil news

உலக வங்கியின் மனித மூலதன குறியீடு (Human Capital Index) மதிப்பீட்டு அறிக்கையில் இந்தியா 115வது இடத்தை பெற்றுள்ளது.World Bank’s Human Capital Index India’s 115th india tamil news

ஆனால், இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறி இந்திய நிதித்துறை அமைச்சகம் இதை நிராகரித்து உள்ளது.

உலக வங்கி தற்போது வெளியிட்டுள்ள மனித மூலதன குறியீடு மதிப்பீட்டை 157 நாட்டு பொருளாதாரத்திற்கு மதிப்பீடு செய்தது.

இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி ஆண்டு விழாவில் இந்த மதிப்பீட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் இந்தியா 115வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா மற்ற தெற்காசிய நாடுகளான நேபாளம், மியான்மர், வங்கதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளை விட உலக வங்கியின் பட்டியலில் பின் தங்கியுள்ளது.

உலக வங்கி குழந்தை இறப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் கல்வி போன்ற அளவுகோல்களை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்பட்ட பொருளாதாரங்களில் இந்தியா 0.44 என்ற மதிப்பெண்ணை பெற்றுள்ளது.

இது தெற்காசியாவிற்கான சராசரியையும் விடக் குறைவானது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது நூற்றில் 44 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவ வசதி, கல்வி உள்ளிட்டவைகளை பெறுகின்றனர் என்பதை குறிக்கிறது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :