யாரைக் காப்பாற்ற நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கவில்லை! – காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு சந்தேகம்!

0
472
Nirmala Devi not-bail save anyone - Kamarasar University Security Committee suspected

“பேராசிரியர் நிர்மலா தேவி, முருகன், ஆராய்ச்சி மாணவன் கருப்பசாமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என மதுரை பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு கூட்டமைப்பின் செயலாளர் முரளி தெரிவித்துள்ளார்.Nirmala Devi not-bail save anyone – Kamarasar University Security Committee suspected

மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் மதுரா கல்லூரியின் முன்னாள் முதல்வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு கூட்டமைப்பின் செயலாளருமான முரளியும் தலைவர் ஸ்ரீனிவாசனும் கூறுகையில், “பேராசிரியர் நிர்மலா தேவி, முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய 3 பேரையும் வெளியேவிடாமல், யாரைக் காப்பாற்றுவதற்காகத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிணை வழங்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து வருவதாகச் சில ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளிவந்தன. அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நிர்மலாதேவி தொடர்பான பிரச்சனையில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழு அமைக்கப்பட்டது. அதன் விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் செல்லத்துரை, தான் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பழிவாங்கப்படுவதாக ஊடகங்களுக்குப் பொய்யான தகவலை கூறிவருகிறார்.

செல்லத்துரை மட்டுமன்றி கடந்த பத்தாண்டுகளில் மதுரை பல்கலைக்கழகத்தில் நடந்த நியமனங்கள் பணி ஒப்பந்தங்கள் பதவி உயர்வு அனைத்தையும் உயர்மட்டக் குழு மூலம் விசாரணை செய்ய அரசு உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :