Type to search

பெற்ற மகளையே பாலியல் உறவுக்கு அழைத்த ஓரினச்சேர்க்கை தாய்; பிரபல சினிமா குடும்பத்தில் நடந்த கொடுமை!

INDIA Top Story Trending

பெற்ற மகளையே பாலியல் உறவுக்கு அழைத்த ஓரினச்சேர்க்கை தாய்; பிரபல சினிமா குடும்பத்தில் நடந்த கொடுமை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் தொழில் அதிபரான ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.homosexual mother had sex daughter – famous cinema family india tamil news

அந்த மனுவில், “நான் பழம்பெரும் சினிமா பட இயக்குனர் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது உறவினர் ஒருவர் காவல்துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாரம்பரியமிக்க எனது குடும்பத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிட்டது.

சென்னையில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது நிரம்பிய எனது மகள் திடுக்கிடும் தகவல் ஒன்றை என்னிடம் கூறினாள். அதைக் கேட்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் அதை விசாரித்தபோது உண்மை என்று தெரியவந்தது. எனது 14 வயது மகளிடம், எனது மனைவியே தகாத உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“உறவுக்கு மறுத்த எனது மகளை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். கொல்வதற்கும் துணிந்துவிட்டார். இதற்கு எனது மாமியாரும் உடந்தையாக செயல்பட்டது வருந்தத்தக்க விஷயம்.

நான் எச்சரிக்கை விடுத்தும் எனது மனைவியும், மாமியாரும் திருந்துவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து எனது மகளுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். எனது மகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

இதனால் அவர்கள் இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் `போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

போலீசில் புகார் கொடுத்தது தெரிந்ததும் புகார் கூறப்பட்ட பெண்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் கும்பகோணத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

போலீசார் கும்பகோணத்திற்குச் சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: