தனுஷ்கோடி கடலில் மூழ்கி கோவை மாணவர் உயிரிழப்பு! – எச்சரிக்கையை மீறி குளித்தபோது சோகம்!

0
417
Dhanushkodi sinking sea - sadness bathing warning india tamil news

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் குளித்த கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். கடலில் மிதந்த அவரது உடலை மீனவர்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.Dhanushkodi sinking sea – sadness bathing warning india tamil news

கோவை கே.கே.புதூர், மணியம் வேலப்ப கவுண்டர் தெரு 6-ம் வீதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரின் மகன் அபர்னேஷ் (22) திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இவருடன் படித்து வரும் பழநியைச் சேர்ந்த மாணவர் வீரமணியுடன் சேர்ந்து ராமேஸ்வரம் வந்துள்ளார்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கல்லூரித் தோழி ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை பகலில் மாணவர்கள் இருவரும் தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்குச் சென்ற அவர்கள் இருவரும் கடலில் குளித்துக்கொண்டிருந்த நிலையில் கடல் சீற்றத்தில் சிக்கிய அபர்னேஷை கடல் அலை இழுத்துச் சென்றது.

இதை அறியாத வீரமணி கரைக்குத் திரும்பிவிட்டார். அபர்னேஷ் தொடர்ந்து குளித்துக் கொண்டு இருக்கிறார் என வீரமணி நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அபர்னேஷின் உடல் கடலில் மிதந்துள்ளது.

இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் சிலர் சிறு படகில் சென்று உயிரிழந்த மாணவர் அபர்னேஷின் உடலை மீட்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் மாணவர் அபர்னேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமேஸ்வரம் மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கக் கூடாது என எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

காவலர்களும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையும் மீறி கடலில் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அலையில் சிக்கி உயிரிழப்பது தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :